சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் -நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!
Thursday, October 19th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதாகவும் வருவாய் குறித்து விவாதம் இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டொலரின் ஒருபகுதி கிடைக்கப்பெற்று நாட்டின் மீட்பு நடவடிக்கைக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்குனரான சீனாவுடனான விவாதங்கள் தொடர்வதாகவும் ஏனைய தரப்பினருடனும் பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து - இளைஞன் பலி!
பிரான்ஸ் அரசாங்கம் இவ்வாரம் பதவி நீக்கம் செய்யப்படலாமென எதிர்பார்ப்பு!
வேலணையில் மக்கள் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் !
|
|
|


