வேலணையில் மக்கள் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் !

Saturday, August 15th, 2026


​….
வேலணை பிரதேசத்தில் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலன்சார் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கட்சியின் குறித்த பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

​கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வேலணை பிரதேசத்தின் சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் மக்களின் வாழ்வியல் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

​இதன்போது, வேலணையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி அல்லது மக்கள் நலன்சார் செயற்பாடுகளானாலும், அவை முழுமையாகப் பிரதேசத்தின் நலனை முன்னிறுத்தும் வகையிலேயே அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டுமென கடுமையாக வலியுறுத்தப்பட்டது.

​மேலும், பிரதேச மக்களின் பிரச்சினைகளை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் துரிதமாக இனங்கண்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான துரித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

​குறித்த கலந்துரையாடலில் பிரதேசத்தின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் சின்னையா சிவராசா (போல்) மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106