பெரிய வெங்காய அறுவடை ஆரம்பம் – உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை!
Saturday, September 30th, 2023
பொலன்னறுவை பகுதியில் பெரிய வெங்காய அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதிகளில் 30 ஏக்கர் அளவான நிலப்பரப்பில் பெரிய வெங்காயச் செய்கை இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில், உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்துக்கான வரியினை அரசாங்கம் மேலும் அதிகரிக்க வேண்டும் என குறித்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, அநுராதபுரம் பகுதியிலும் தற்போது நிலக்கடலை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய விலையில் நிலக்கடலை விற்பனை செய்யப்படாமையினால் பயிர்ச்செய்கைக்காக செலவிடப்பட்ட தொகையை கூட பெற்றுக்கொள்ள முடியாதநிலை உள்ளதாக குறித்த பகுதியிலுள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106