இலங்கையின் அடுத்த பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்படுவார் – ஜனாதிபதியால் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிப்பு!
Friday, March 17th, 2023
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (16) பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததுடன், உத்தியோகபூர்வமற்ற முறையில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106