இந்த வருடம் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தை கடக்கும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
Tuesday, August 29th, 2023
இந்த வருடம் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை விரைவில் 9 இலட்சத்தை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 8 இலட்சத்து 91 ஆயிரத்து 188 பேர் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் முழுவதும், மொத்தமாக 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப்பயணிகளே நாட்டிற்கு வருகைத்தந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் படி, இந்த வருடம் இந்தியா மற்றும் ரஷ்யாவில் இருந்து ஒரு இலட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளதுடன் பிரித்தானியா மற்றும் ஜேர்மனியில் இருந்து 50 ஆயிரம் பேர் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை மற்றும் செக்குடியரசுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தத்திட்டம்!
பிரயோக ரீதியான பயிற்சியுடன் கூடிய பாடநெறி - வெளிநாடு செல்லவுள்ள பணியாளர்கள் குறித்து வெளிநாட்டுத் தொ...
காற்றின் தரம் வெகுவாகப் பாதிப்பு - வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு எச்சரிக்கை!
|
|
|


