காற்றின் தரம் வெகுவாகப் பாதிப்பு – வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு எச்சரிக்கை!
Monday, November 10th, 2025
……
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம் தற்போது ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு குறைந்துள்ளதாக, காற்றுத் தரக் குறியீட்டு (AQI) முறைமையின் நேரடி தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி கதுருவெல, சிலாபம், அகரகம, வந்துரகல, திகன, மடம்பகம, ஹங்கம, அக்கரைப்பற்று, கலவான, முள்ளியவளை,பன்னங்கண்டி மற்றும் உப்புவெளி ஆகிய இடங்களுடன், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பின் பல பகுதிகளும் அடங்குகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் காற்றிலுள்ள மாசு அளவு நீண்ட நேரம் சுவாசிப்பதற்கு ஆபத்தான அளவை எட்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது சிறுவர், முதியோர், மற்றும் சுவாச அல்லது இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால் குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசத்தை அணியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106