கொரிய பிரதிநிதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் இடையே கலந்துரையாடல் – அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில் கொரியாவுடன் கைகோர்க்கும் கிழக்கு மாகாணம்!
Thursday, August 10th, 2023
கொரியா அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (09) சௌமியபவானில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில்,கொரியா பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதோடு, இது உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு உதவியாகவும் , விவசாயிகளுக்கு சிறந்த விற்பனை விலையின் மூலமாக வருமானம் ஈட்டக் கூடியதாகவும் அமையும்.
மேலும் மலையகத்திற்கு, இதன் ஊடாக விநியோகத்தை ஆரம்பிப்பது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர் இழுவை படகுகள் இரண்டு பருத்தித்துறை கடற்பரப்பில் தடுத்துவைப்பு!
இதுவரை 15 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவிப்பு!
சுதேச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் மட்டுமே எரிபொருட்களின் ...
|
|
|


