25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய மின் சக்தி – அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் ஆரம்பம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவிப்பு!

Thursday, May 11th, 2023

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய மின்கலங்களை வழங்கும் நடவடிக்கை, அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததும் ஆரம்பிக்கப்படுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை தேசிய மின் கட்டமைக்கு சேர்க்க எதிர்பார்ப் பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கு சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 வீடுகளுக்கு சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106