குவைத்தில், இலங்கையர் உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை – ஐ.நா கண்டனம் !

Saturday, July 29th, 2023

குவைத்தில், இலங்கையர் உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் செய்ப் மகன்கோ, இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

குவைத் மற்றும் சிங்கப்பூரில், இந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளை, தமது அலுவலகம் கண்டிப்பதுடன், எல்லா சூழ்நிலைகளிலும் மரண தண்டனையை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குவைத்தில், இலங்கையைச் சேர்ந்த போதைபொருள் வர்த்தகர் ஒருவர் உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேநேரம், சிங்கப்பூரிலும் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
இந்தியாவுக்காக நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதுவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப...
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 13 முதல் 15 ஆம் திகதிவரை டெங்கு கட்டுப்பாட்டு களப்பரிசோதனை - மாவட்ட பதி...

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த தலைமையிலான உயர்மட்டக் குழு அடுத்த வாரம் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்...
இலங்கை அரசு அனுமதி வழங்கினால் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க தயார் - ரஷ்ய தூதுவர் தெரிவிப்ப...
கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை - கல்வி...