இந்தியாவிலிருந்து திருகோணமலைக்கு எண்ணெய் விநியோக குழாய் மார்க்கத்தை அமைக்க நடவடிக்கை!
Saturday, July 15th, 2023
இந்தியாவின் – நாகப்பட்டிணத்திலிருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு எண்ணெய் விநியோக குழாய் மார்க்கத்தை அமைப்பதற்கான யோசனையை இந்திய ஒயில் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில், பல தரப்பினருடன், கலந்துரையாடியுள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்போது, அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை கருத்திற்கொண்டு இருவழி எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அமைச்சர் இந்தியன் ஒயில் நிறுவன அதிகாரிகளிடம் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
குறித்த யோசனையின் சாத்தியகூறுகள் மற்றும் தொழிநுட்ப தேவைகள் குறித்து மதிப்பாய்வு செய்யவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!
அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரிடம் விசாரணை!
பேருந்து விபத்து – தென்னாபிரிக்காவில் 20 பேர் உயிரிழப்பு!
|
|
|


