பேருந்து விபத்து – தென்னாபிரிக்காவில் 20 பேர் உயிரிழப்பு!
Tuesday, September 19th, 2023
தென்னாபிரிக்காவில் பேருந்து ஒன்றும் பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்றையதினம் நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வைரச் சுரங்க அகழ்வு பணிகளுக்காக தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றும் பாரவூர்தியொன்றுமே இவ்வாறு மோதுண்டுள்ளது.
பாரவூர்தியின் சாரதி சாரதி அனுமதி பத்திரமின்றி கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் செளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!
மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு ஆரம்பம் !
ரணில் தயக்கம் காட்டினாலும் மக்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்ட...
|
|
|


