கல்லுண்டாய் வீதியில் கோர விபத்து – சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
Thursday, June 29th, 2023
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் புதிய குடியிருப்பு பகுதியை அண்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றையதினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் அம்புலன்ஸ் வண்ணமூலம் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.
இந்நிலையில் கறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
குறைந்த விலையில் புதியரக வாகனம்!
போதைப் பொருள் மையமாக வடக்கு - பொலிஸார் நேற்றுத் தெரிவிப்பு!
மக்களின் பிரச்சினைகளுக்கு முறையான அபிவிருத்தியே தீர்வைக் கொடுக்கும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுத...
|
|
|


