போதைப் பொருள் மையமாக வடக்கு – பொலிஸார் நேற்றுத் தெரிவிப்பு!
Wednesday, November 9th, 2016
இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுத் தென் பகுதிக்கு போதைப் பொருட்களைக் கடத்தும் மையமாகவே வடக்கு இருக்கின்றது. இங்கு 5 சதவீதமானவரே அதன் நுகர்வுக்குரியவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நேற்று நடத்திய சிறப்புக் கலந்துரையாடலில் பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கின் தற்போதைய நிலமை தொடர்பில், வடக்கு மாகாண ஆளுனர் குரே தலைமையில் அவரது அலுவலகத்தில் நேற்றுக்காலை சிறப்புச் சந்திப்ப இடம்பெற்றது. இதில் வடக்கில் தொடர்ச்சியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது. இந்தியாவிலிருந்தே போதைப் பொருட்கள் இங்கு கொண்டுவரப்படுகின்றன. தென்னிலங்கையைச் சேர்ந்த முதலாளிகளுக்கே அவை கொண்டு வரப்படுகின்றன. இதனைக் கடத்தும் மையமாகவே வடக்கு இருக்கின்றது. வடக்கில் போதைப் பொருள் நுகர்வு 5 சதவீதம்தான். போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்குத் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106