எதிர்வரும் 20ஆம் திகதி கட்சித் தலைவர்கள் – நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவிப்பு!
Saturday, April 15th, 2023
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றையதினம் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவாகும்.
இதன்படி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புத்தாண்டின் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாடசாலை, பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பம்!
மலையக ஆசிரிய உதவியாளர்களை உள்ளீருங்கள் - இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் கல்வி அமைச்சுக்குக் கடிதம்!
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு சுகாதார வழிகாட்டல் விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - சபை அம...
|
|
|


