மலையக ஆசிரிய உதவியாளர்களை உள்ளீருங்கள் – இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் கல்வி அமைச்சுக்குக் கடிதம்!
Saturday, July 6th, 2019
இலங்கை ஆசிரியர் சேவைக்குள் மலையக ஆசிரிய உதவியாளர்களை உள்ளீர்க்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அவசர கடிதம் ஒன்றை இலங்கை ஆசிரிய சேவைச் சங்கம் கல்வி அமைச்சருக்கு இன்று அனுப்பியுள்ளது.
மலையகத்திலுள்ள பாடசாலைகளில் பல வருடங்களாக ஆசிரிய உதவியாளர்களாக மிகக் குறைந்த சம்பளத்திற்கு சேவையாற்றுபவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும் படி கோரிய கடிதம் ஒன்றை கல்வி மற்றும் கல்வி இராஜங்க அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொண்டர்களுக்கு உடனடியாகவே ஆசிரியர் நியமனம் வழங்கும் அதே நேரம் மலையகத்திலுள்ள ஆசிரிய உதவியாளர்கள் மாற்றான்தாய் மனப்பாங்குடன் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைய இடமளிக்கப்போவதில்லை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உற...
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியாகும் - வெளிவிவகார ...
500 டிப்ளோமா ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் - அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப்பு!
|
|
|
நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் - பிரதமர் ...
நாட்டில் இன்று 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்ப...
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து, கறுப்புக்கொடி போராட்டம் – இலங்கை - இந்திய எல்லை வரை ச...


