நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!
Monday, March 6th, 2023
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றின் போது ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில் – தற்போதைய நிலைமையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு அந்நியச் செலாவனி தட்டுப்பாடு இல்லை.
எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, அத்தியாவசிய மருந்துகள் என அனைத்துப் பொருட்களுக்கும் தேவையான அந்நிய செலாவணியை தற்போது மத்திய வங்கி வழங்குவதில்லை.
தற்போது வங்கி முறை மூலம் வழங்கப்படுகின்றது மற்றும் அதன் வைப்புத் தொகை இப்போது சுமார் 600 மில்லியனாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் எனவம் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
300 எக்கர் நிலப்பரப்பில் புதிதாக நெற்செய்கை!
தொடரும் கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு மாகாணம் - இன்றும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவ...
பிரான்ஸுக்கான நேரடி விமான சேவைகளை மீண்டும் முன்னெடுக்கிறது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!
|
|
|


