அஞ்சல் பணியாளர்களின் போராட்டத்தால் 200 கோடி நட்டம்!

Wednesday, June 27th, 2018

தபால் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பால் 200 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
பதினாறு நாட்களாக தபால் பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தொழிற்சங்க கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய எழுத்து மூல பதிலளிக்கத் தவறினால் இந்தப் போராட்டம் தொடரும்.
தபால் திணைக்களத்தை விற்பனை செய்யும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. தபால் திணைக்களம் நாள் ஒன்றுக்கு ஏழு இலட்சம் சாதாரண மற்றும் பதிவுத் தபால்களை விநியோகிப்பதுடன், உள்நாட்டு வெளிநாட்டு பார்சல்கள் பெருந்தொகையையும் விநியோகம் செய்து வருகின்றது.
அத்துடன் சிரேஸ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவு, ஓய்வூதியக் கொடுப்பனவு, மோட்டார் போக்குவரத்து அபராதம், சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் வேலணை பிரதேச நன்நீர் நிலைகளில் மேலும் ஒருதொகுதி மீன் ...
உயர்தர மாணவர்களுக்கான தொண்டமனாறுப் பரீட்சைகள் நாளை ஆரம்பம் – சகல மாணவர்களையும் பரீட்சைக்கு தோற்றுமாற...
ஆட்கடத்தல் மற்றும் காப்புறுதி மோசடியின் பின்னணியில் அரசியல்வாதிகள் - அமைச்சர் மனுச நாணயக்கார தகவல்!

நாடளாவிய ரீதியில் பயண கட்டுப்பாடு தொடர்பான இறுதி முடிவு நாளை - அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெ...
மேலும் இரு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துங்கள் - ஜனாதிபதியிடம் இலங்கை வைத்திய அதிகாரிக...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளைமுதல் முழமையான கற்றல் செயற்பாடகள் ஆரம்பம் - நோய்...