அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் வேலணை பிரதேச நன்நீர் நிலைகளில் மேலும் ஒருதொகுதி மீன் குஞ்சுகள் விடப்பட்டன!
Saturday, February 8th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வேலணை பிரதேச நன்நீர் நிலைகளில் ஒருதொகுதி மீன்குஞ்சுகள் இன்றையதினமும் (8) விடப்பட்டன.
பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை மேம்படுத்தும் நோக்கில் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக குறித்த திட்டம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம்(08) வேலணை பிரதேசத்தின் நன்நீர் நிலைகளான முகுந்தா குளம் சங்கத்தார் கேணிக் குளம், பெருங்குளம் ஆகிய குளங்களில் குறித்த சிலாப்பியா இனத்தைச் சேர்ந்த மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
அடுத்துவரும் மூன்று மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படும் குறித்த மீன் குஞ்சுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதிகளாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி அனுசியா ஜெயகாந்த் மற்றும் தியாகராஜா ஹேமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு முன்னெடுத்திருந்தார்.
அத்துடன் குறித்த மீன்குஞ்சுகள் விடும் நிகழ்வில் மாவட்ட நீர்வாழ் உயிரின வள விரிவாக்கல் திணைக்கள உத்தியோகஸ்தர்.மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வேலணை பிரதேச ஆலோசனை சபை தலைவர் திரு.ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106



