சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தனியார் வங்கிகளுடன் உடன்படிக்கை!
Sunday, February 26th, 2023
இலங்கை சுற்றுலா தொழிற்துறையின் முன்னேற்றத்திற்கு, சுற்றுலா அட்டை ஒன்றை வெளியிடுவதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, தனியார் வங்கிகளுடன் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
குறித்த சுற்றுலா அட்டையின் மூலம், நாட்டில் சுற்றுலாப்பயணிகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்த சுற்றுலா தொழிற்துறையினருக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளன.
சுற்றுலாப் பயணிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் போது, சிறப்பு வரப்பிரசாதங்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வானிலை தொடர்பில் பொது மக்களுக்கான முன்னறிவிப்பு!
ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை டெல்லி வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - அதிகார பூர்...
சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் வகுப்புகளுக்கு அனுப்புவதை தவிருங்க...
|
|
|


