நிலவும் மிக வரண்ட காலநிலை – தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
Monday, February 12th, 2024
நாட்டில் தற்போது நிலவும் மிகவும் வரண்ட காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையானது சிறுவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள சிறுவர் களுக்கு கூட இந்நாட்களில் குளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளாவது குளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும், ஒருவருக்கு தோல் நோய்கள் இருப்பின் காலையிலும் இரவிலும் சுமார் 20 நிமிடங்களேனும் நீரில் இருப்பதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டத் தடை - வெளிவந்தது அதிவிசேட வர்த்தமானி!
அதிகரித்த ஒலிபெருக்கியின் சத்தங்களினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு – பெற்றோர் குமுறல்!
தாய்லாந்து – இலங்கை இடையே இருதரப்பு தடையற்ற வர்த்தக உடன்படிக்கை – பெப்ரவரியில் கையெழுத்திட திட்டமிட...
|
|
|
இன்று நடைபெறுவது அடுத்த தேர்தலின் நாற்காலிப் போட்டிகளே - ஈ.பி.டி.பியின் ஈ.பிடி.பி முக்கியஸ்தர் விந்த...
“அஸ்வெசும” நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேம...
அஸ்வெசும பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரதேச செயலக அதிகாரியொருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் ...


