ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை டெல்லி வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – அதிகார பூர்வமாக அறிவித்தது வெள்ளை மாளிகை!

Wednesday, September 6th, 2023

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை டெல்லிக்கு வருகை தரவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை வெள்ளை மாளிகை அதிகார பூர்வமாக  அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி ஜோ பைடன் ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள வியாழக்கிழமை டெல்லிக்குச் செல்லவுள்ளார்.

அத்துடன் வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியுடன், அவர் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு  அண்மையில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து ஜோ பைடனின் வருகையில் மாற்றம் ஏற்படுமா என்று கருதப்பட்டது. எனினும் ஜோபைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106