பதின்மூன்றை எதிர்த்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் – கொழும்பில் பதற்றம்!

Wednesday, February 8th, 2023

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கு பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, பிக்குமாருக்கும் காவல்துறையினரும் இடையே முறுகல் ஏற்பட்டது.

பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட பிக்குமாரை காவல்துறையினர் தடுக்க முற்பட்ட போது இவ்வாறு முறுகல் ஏற்பட்டது.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பௌத்த பிக்குமார் இன்று (08) கோட்டே, பரகும்பா பிரிவெனாவிற்கு அருகில் இந்த எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்தனர்.

பேரணியை காவல்துறையினர் தடுத்த போதும், பிக்குமார் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தியத்த பூங்காவை கடந்து பொல்துவ சந்தியை அடைந்தனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் சில 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106