வட மாகாணத்தில் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!
Monday, March 22nd, 2021
வட மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்றுறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று 290 பேருக்கான பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 7 பேரும் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டம் ஒழுங்கைப் பேண புதிய பொலிஸ் படையணி!
எவரும் கைவிடப்படாத வகையில் “அஸ்வெசும” திட்டத்தை முன்னெடுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணி...
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு எதிர்பார்ப்பு - வர்த்தக அமைச்சர் ந...
|
|
|


