அமைச்சரவைக்கு மேலும் 12 அமைச்சர்கள் – அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தி ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு செல்வார் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,தெரிவிப்பு!
Sunday, July 24th, 2022
நாட்டில் மேலும் 12 அமைச்சர்கள் நியமனம் பெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றுமுன்தினம் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றனர்.
இதற்கமைய அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் இவ்வாறு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தற்போதுள்ள இடைக்கால அமைச்சரவையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தி ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு செல்வார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஹரிஸ்ணவி மக்களுடைய மனங்களிலிருந்து மறைந்துவிட்டாளா ? தாயார் உருக்கம்!
மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க அமைச்சரவை அனுமதி - அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் ப...
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின்...
|
|
|


