மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க அமைச்சரவை அனுமதி – அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து பாடசாலைகள் மூடப்பட்டமையால், பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியைப் பயன்படுத்தி உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 12 இலட்சம் மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முட்டை, போஷாக்கு உணவு, அரிசி, நூடில்ஸ், பிஸ்கட், கடலை, கௌபி போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளமதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106