யாழ். விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Tuesday, May 31st, 2022
யாழ். பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பொருளாதார நெருக்கடி காரணமாக மூடவுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளிவந்திருந்த நிலையில் அது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஊடகங்கள் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, “இலங்கையிலுள்ள எந்தவொரு விமான நிலையத்தையோ, தொழிற்சாலையையோ, அரச நிறுவனத்தையோ மூடும் திட்டம் எதுவுமில்லை” என்று பிரதமர் பதிலளித்துள்ளார்.
கோவிட் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இன்னமும் தமிழகத்துக்கான சேவைகள் மீள ஆரம்பிக்கவில்லை. உள்ளூர் சேவைகளே இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரச அதிகாரிகள் விஜயம் !
சமஷ்டி வேண்டாம் என சுமந்திரன் சொல்லியிருப்பாரா? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி...
சுற்றுலா பயணிகள் பதிவு செய்யப்பட்ட விடுதிகளில் மாத்திரமே தங்க முடியும் - அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க...
|
|
|


