இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படாது – லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவிப்பு!
Tuesday, May 24th, 2022
இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள லிட்ரோ காஸ் நிறுவனம் மக்களை வரிசைகளில் நிற்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
எரிவாயு கையிருப்பு குறைந்து வருவதால் உள்நாட்டு எரிவாயு உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள லிட்ரோ காஸ் அத்தியாவசிய சேவைகள் வணிக நடவடிக்கைகளுக்கு லிட்ரோ காஸ் தொடர்ந்தும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
3500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் இரண்டு கப்பல்கள் வியாழக்கிழமையே இலங்கை வரும் எனவும், வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமையே எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையில் 25000 வெளிநாட்டு ஊழியர்கள்!
மீள் நிரப்பு நிலையங்களில் மேலதிகமாக எரிபொருள்: தாங்கி ஊர்திகள் திருப்பி அனுப்பப்பட்டன - வலுசக்தி அமை...
புதிய அரசாங்கம் பொறுப்பேற்று 13 நாட்களில் 41900 கோடி ரூபா கடன் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹி...
|
|
|


