ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கா க நடைபவனி!
Sunday, April 21st, 2024யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி இன்றையதினம் இடம்பெற்றது.
ஊர்காவற்றுறை ஆதாரவைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து நடைபவனியை ஏற்பாடு செய்ததுடன் வடமாகாண பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை என்பன பங்கேற்றது.
ஊர்காவற்றுறை வைத்தியசாலை நோயாளர் விடுதி ஒன்றை கட்டுவதற்கான நன்கொடைகளை கொடையாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வின் நிமித்தமும் மக்களுக்கான சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடத்தப்பட்டது.
இந் நடைபவனி யாழ் போதனா வைத்தியசாலையில் காலை 6 மணியளவில் ஆரம்பித்து பண்ணை வீதி வழியாக ஊர்காவற்றுறை வைத்தியசாலையை அடைந்தது.
000
Related posts:
பேஸ்புக் தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!
பௌத்த மத சிந்தனைக்கு ஏற்ப முடிவுகளை இந்த நாட்டின் தலைவர்கள் எடுக்க வேண்டும் - பேராயர் மால்கம் ரஞ்சித...
யாழ்.நகரில் வெள்ளத்தில் மிதக்கும் கழிவு எண்ணெய் - பொறுப்புவாய்ந்தோர் அசமந்தம் - நிலத்தடி நீர் மாசு...
|
|
|


