பரீட்சை நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு – விசேட ரோந்து பணிகளில் பொலிஸார்!
Monday, May 23rd, 2022
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பரீட்சை நிலையத்திற்கும் ஒரு சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை வினாத்தாள் போக்குவரத்திற்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகவும், பொலிஸார் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சை நடைபெறும் காலத்தில் வீதிகளை மறித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பெரும்போகத்துக்குத் தேவையான சேதன உரத்தை தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கான பொறிமுறை தயார...
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை - முல்லைத்தீவு மாவட்டத்தில் 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிப...
சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் முதலாவது மாநாடு இலங்கையில்!
|
|
|


