பூரண கொவிட் தடுப்பூசி தொடர்பான வர்த்தமானி இரத்து – சுகாதார அமைச்சு தகவல்!
Monday, May 2nd, 2022
பூரண கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, ஏப்ரல் 30 ஆம் திகதிமுதல் முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடை செய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, முன்னர் வெளியிடப்பட்ட 2264/09 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 101வது உத்தரவு, சுகாதார அமைச்சரினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
அங்கவீனமுற்ற படையினரின் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் முன்னுரிமை!
கொழும்பு பிரகடனம் ஜெனிவா உலக சுகாதார அமைப்பு மாநாட்டில்
பச்சிலைப்பள்ளியில் 2221 கிணறுகள் தேவை!
|
|
|


