எந்த சந்தர்ப்பத்திலும் அரிசிக்குத் தட்டுப்பாடு வராது – விவசாய அமைச்சர் நம்பிக்கை!
Sunday, December 12th, 2021
நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இரசாயன உரத்துக்கான தடையையடுத்து நாட்டில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வயல் நிலங்கள் அழியும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் நாட்டில் அரசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனப் பல தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.
இதற்கு ஊடகங்களிடம் பதிலளிக்கையிலேயே விவசாயத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
10 மாதங்களுக்குத் தேவையான அரிசி கையிருப்பில் இருக்கின்றது எனவும், பெரும்போகத்தின் போது தேவையான அறுவடை கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
மக்கள் எதிர்ப்பு: கைவிடப்பட்டது நிலஅளவீடு!
யாழில் மீண்டும் உயிர்த்தெழும் வாள்வெட்டு கலாச்சாரம்: குடும்பஸ்தர் வெட்டிபடுகொலை!
பியரின் விலைகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு!
|
|
|


