மக்கள் எதிர்ப்பு: கைவிடப்பட்டது நிலஅளவீடு!
முல்லைத்தீவு முள்ளிவாய்கால் கிழக்கில் நில அளவை மேற்கொள்ளவதற்கு சென்ற நில அளவையாளர்கள் மக்களின் எதிர்ப்பை அடுத்து திரும்பிச்சென்றுள்ளனர். என செய்திகள் கூறுகின்றன.
முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படையினருக்கு வழங்குமாறு தெரிவித்து நில அளவை மேற்கொள்ள இன்று காலை குறித்த பகுதிக்கு நில அளவையாளர்கள் சென்றிருந்தனர். இதனை தொடர்ந்து வட்டுவாகல் பாலத்தை அண்மித்த இரண்டு பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை மவாட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் நேரில் வருகைதந்து, இனிமேல் காணி அளவீடு மேற்கொள்ள அனுமதி வழங்கபோவதில்லை என உறுதி மொழி தரவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Related posts:
கொழும்பில் அமுலாகவுள்ள புதிய நடைமுறை!
தீவிரமடையும் கொரோனா – இலங்கையில் 20 நாட்களின் பின்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளி!
இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் டீசல் முதல் தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை...
|
|
|


