ஜப்பானுக்குள் உள்நுழைய அனைத்து வெளி நாட்டவர்களுக்கும் தடை – ஜப்பானிய பிரதமர் அறிவிப்பு!
Monday, November 29th, 2021
உலகம் முழுவதும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு பரவி வருவதால், தமது நாட்டின் எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
அதற்கமைய, அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் இன்று 30 ஆம் திகதி நள்ளிரவுமுதல் மறு அறிவித்தல் வரை ஜப்பானுக்குள் உள்நுழைய அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளார்.
முன்னதாக, தென்னாபிரிக்கா மற்றும் அதன் 8 அண்டை நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும், 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதிகளையும் ஜப்பான் அறிவித்திருந்தது.
எனினும், ஒமிக்ரோன் வைரஸ் திரிபு பல நாடுகளில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இந்தப் புதிய கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான அறிவித்தல்!
இராணுவத்தினரை பாதுகாக்க விசேட பொறிமுறை ஒன்றும் சட்டத்தின் ஊடாக வகுக்கப்படும் - போக்குவரத்து அமைச்சர...
30,000 பேர் ஓய்வு பெறுவது பொதுச் சேவைகளுக்கு இடையூறாக இருக்காது - உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர...
|
|
|


