நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
Monday, May 4th, 2020
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடுமையான வெப்பநிலையுடன் கூடிய வானிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் மே மாத முடிவில் பருவப் பெயர்ச்சி நிலை உருவாகும் எனவும் அதுவரையில் இந்த அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை நீடிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆய்வாளர் ஷானிகா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று மேல், மத்திய, சபரகமுவ, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறியுள்ளார். சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசக் கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் புதிய அரசியலமைப்பிற்கான மக்கள் கருத்துக் கணிப்பின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
பணி செய்ய அஞ்சும் அரச பணியாளர்கள் - யாழ். மாவட்டச் செயலர்!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு!
|
|
|


