இராணுவத்தினரை பாதுகாக்க விசேட பொறிமுறை ஒன்றும் சட்டத்தின் ஊடாக வகுக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு!
Saturday, March 6th, 2021
நாட்டுக்கு எதிராக எத்தனை பிரேரணைகள் கொண்டுவந்தாலும் ஒருபோதும் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க மாட்டோம் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் இராணுவத்தினரை பாதுகாக்க விசேட பொறிமுறை ஒன்றும் சட்டத்தின் ஊடாக வகுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் –
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து மாறுப்பட்ட பல கருத்துக்கள் தோற்றம் பெற்றுள்ளன. குறிப்பாக கத்தோலிக்க மக்கள் அறிக்கை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அதேநேரம் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பான பொறுப்பினை அரசாங்கத்தால் ஏற்கமுடியாது.
கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குவில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்த ஜனாதிபதி முனைந்தபோது அதற்கு மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டனை இடமளிக்கவில்லை. ஆணைக்குழுவில் மாற்றம் ஏற்படுத்தாமல் துரித அறிக்கையினை கோரினார்கள்.
அதேநேரம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை நிறுத்தப்படவில்லை. விசாரணை நடவடிக்கைள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
ஆகவே, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றும் என்பதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106