இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!
Sunday, November 28th, 2021
இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் இன்று (28) அதிகாலை 6 மணிக்கு இந்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டு வான்கதவுகள் 6 அங்குலத்துக்கும், இரண்டு வான்கதவுகள் 12 அங்குலத்துக்கும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
டெங்கு நோய்த்தொற்றை தடுக்க துரித நடவடிக்கை - யாழ். பொலிஸார்!
கடற்படையினரால் பார்வை வில்லைகள் அன்பளிப்பு!
வவுனியா வளாகத்தில் மருத்துவபீடத்தை உருவாக்குங்கள் - யாழ்.போதனா பிரதி பணிப்பாளர் கோரிக்கை!
|
|
|


