யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டிஜிட்டல் தொடு திரை திறந்து வைப்பு – வைத்தியசாலையில் ஏழு நுழைவாயில்களிலும் காட்சிப்படுத்தப்படுள்ளதாகவும் தெரிவிப்பு!
Saturday, February 17th, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டிஜிட்டல் தொடு திரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் தொடு திரை நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளவும், இலகுவில் யாழ் போதனா வைத்தியசாலையின் அனைத்து பிரிவுகளையும், இடங்களையும் அறிந்து கொள்வதற்காகாகவும் நீண்ட கால திட்டமிடலின் பிரகாரம் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொடுதிரையில் அனைவரும் இலகுவான முறையில் தகவல்களை பெற்றுக்கொள்ளும் விதத்தில் ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் தொடுதிரை வைத்தியசாலையில் ஏழு நுழைவாயில்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பயனாளிகளை தேர்வு செய்வதில் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவிப்பது அவசியம்...
இலங்கையில் தீவிரமாக பரவும் எலிக்காய்ச்சல் தொற்று - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
சில சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நிதி மோசடி - நாளாந்தம் ஒரு கோடிக்கும் அதிகம் நட்டம் - அமைச்சர்...
|
|
|
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் உள்ள கைதிகளை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்ப திட்டம்...
யாழில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம் – இலங்கையின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 870 ஆக...
நாட்டை மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஒரு விரிவான அறிக்கை வேண்டும் – ஜனாதிபதி துறைசார் தரப்பினரிடம் வல...


