தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!
Tuesday, November 16th, 2021
தேர்தல், வாக்கெடுப்பு முறைமை மற்றும் சட்ட விதிமுறை மறுசீரமைப்பை அடையாளங் காணவும் அது சம்பந்தப்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்குமான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக்காலம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சபை முதல்வர் தினேஸ் குணவர்த்தன முன்வைத்த யோசனைக்கு நேற்றையதினம் நாடாளுமன்றில் அனுமதி கிடைத்திருந்தது.
இந்தத் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த மே மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றதுடன், அதன் அறிக்கை ஆறு மாதங்களில் முன்வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தொழிநுட்ப பிரிவு மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவுஸ்திரேலியவுடன் ஜனாதி...
மக்கள் முகங்கொடுக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை நேரடியாக அறிவிப்பதற்கு 3 தொலைபேசி இலக்கங்கள் அறிம...
|
|
|


