அமரர் சிவபாதத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
Saturday, June 18th, 2016
காலஞ்சென்ற அமரர் பொன்னையா சிவபாதத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலுத்தினார்.
யாழ்ப்பாணம் மூத்தவிநாயகர் வீதி, நல்லூரில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றைய தினம் (18) சென்ற டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளையதினம் நடைபெறவுள்ளன. அமரர் சிவபாதம் பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
அமைச்சரின் அகவை நாளை முன்னிட்டு கட்சியின் ஆதரவாளர்களால் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுப்பு!
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கங்கள...
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!
|
|
|


