மீன்பிடித் துறைமுகங்களில் முதலீடுகளை மேற்கொள்ள தனியார் முதலீட்டாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!
Thursday, September 30th, 2021
மீன்பிடித் துறைமுகங்களில் முதலீடுகளை மேற்கொண்டு துறைமுகத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட தனியார் முதலீட்டாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் வழங்கி வைத்துள்ளனர்.
இதன்மூலம் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகங்களின் செயற்பாடுகள் மற்றும் துறைமுகங்களில் காணப்படுகின்ற பெறமதிசேர் உற்பத்திச் செயற்பாடுகள் போன்றன நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் முக்கியத்துவம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் பைஸர் !
பயிற்சி பெறுநர் இன்மையால் பயிற்சியை இடைநிறுத்தும் நிலை - பனை அபிவிருத்தி சபை கவலை!
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு!
|
|
|


