உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் முக்கியத்துவம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் பைஸர் !

Friday, January 5th, 2018

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான ஒதுக்கப்பட்டுள்ள ஹோட்டல்களில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் அவரது அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுய கௌரவத்தைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பைக் காட்டும் குறித்த காலப்பகுதியில், சுற்றுலாத் துறைக்கு தடையை ஏற்படுத்தும், சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை உரிமைகளை மீறும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் விசேட நடவடிக்கை ஒன்றை எடுக்கவுள்ளதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஹோட்டல்களை சோதனை செய்து அவர்களது வர்த்தக அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106