இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை விரைவில் – காணி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Wednesday, June 30th, 2021
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 4 இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணித் துண்டுகளை பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ. ஏ. கே ரணவக்க தெரிவிக்கையில் – நாட்டில் சுமார் 5 இலட்சம் மக்கள் காணிகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கமைய பயன்படுத்தப்படாத காணிகளை அடையாளம் கண்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததுள்ளார் அத்துடன் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய 4 இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குடாநாட்டில் மூவாயிரம் படகுகள் பதிவு - கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம்!
நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
நெடுந்தீவு படுகொலை – சந்தேக நபரிடமிருந்து 26 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவிப்பு!
|
|
|


