அழைப்பு கிடைக்கவில்லை – முரளிதரன்!
Wednesday, August 10th, 2016
அவுஸ்திரேலிய இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சீ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியினைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள பரிசளிப்பு விழாவிற்கு முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முரளிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளதாக இன்றைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இதுவரை அதற்கான அழைப்பு தனக்கு கிடைக்கவில்லை எனவும், அவ்வாறு அழைப்பு கிடைத்தால் அதில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் பின்னரே முடிவு எடுக்கப்படும் எனவும் என முத்தையா முரளிதரன் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த போட்டியானது எதிர்வரும் 13அம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெடிப்புச் சம்பவம் : இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி!
05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்!
தென்னிந்தியாவையும் வடக்கு கிழக்கையும் இணைக்க புதிய பாலம் - பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெள...
|
|
|


