மாகாண சபைத் தேர்தலை எந்நேரத்திலும் நடத்த தயார் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவிப்பு!
Saturday, March 20th, 2021
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான, ஒழுங்குவிதிகள் மற்றும் சட்டம் என்பனவற்றை அரசாங்கம் ஏற்படுத்தித் தருமாயின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரான சிரேஷ்ட நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, சுமார் இரண்டரை மாதம் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் உயர்தர பரீட்சை வெட்டுப் புள்ளிகளில் மாற்றம்!
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைபு வர்த்தமானியில்!
வறிய குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதேச செயலாளர்களது உதவியுடன் பயனாளிகளைத் தேர்வு செய்ய ...
|
|
|
கடல் அரிப்பால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிட...
மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு - பொலிஸ் மா அதிபர்...
மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரி...


