அமெரிக்காவிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளைக் பெற்றுக்கொள்ள இலங்கை நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021

கொரோனா தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, தடுப்பூசிகளை வழங்குமாறு இலங்கையும் அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

இலங்கையில் தடுப்பூசிகளின் தேவை அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமெரிக்காவினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்ஹ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 26 ஆம் திகதி அமெரிக்கா 60 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.

இதனையடுத்து, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கொழும்பில் உள்ள அமெரிக்க தூதர் அலைனா பி.டெப்லிட்ஸ் மூலமாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாகவும் வெளிவிவகாரத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு சபை ஆகியவை இது தொடர்பாக இலங்கையின் தேவைகளை அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன என ரவிநாத் ஆரியசிங்ஹ தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்புமுதல் டோஸ் எடுத்தவர்களுக்கு 6 இலட்சம் டோஸ் அஸ்ட்ராசெனெகா அவசரமாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவுபடுத்துங்கள் – துறைசார் ...
தேவையேற்படின் காஸாவில் இருந்து இலங்கையர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் தா...
நிவாரணங்களை எதிர்பார்க்காமல் கடனை முகாமைத்துவம் செய்யும் திறன் இலங்கைக்கு உள்ளது – ஜனாதிபதி ரணில் தெ...