மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவுபடுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்பு!

Wednesday, February 10th, 2021

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவு படுத்துமாறு துறைசார் தரப்பினருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது நாம் காலத்துடனும் போட்டியிட வேண்டியுள்ளது. எனவே, இந்த 5 வருட காலப்பகுதியில் மக்கள் எதிர்பார்த்த செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அனைவரும் செயற்பட வேண்டும்.

தற்போது சேவையாற்ற கூடிய சக்திமிக்கதும், அனுபவமிக்கதுமான தரப்பினர் எம்முடன் உள்ளனர்.

எனவே, அதனூடாக முழுமையான வெளிப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106