நிவாரணங்களை எதிர்பார்க்காமல் கடனை முகாமைத்துவம் செய்யும் திறன் இலங்கைக்கு உள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Saturday, June 29th, 2024

பொருளாதாரப் பிரச்சினை காரணமாக கென்யா பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கொலைகளும் இடம்பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும், நாட்டுக்குள் பொருளாதார நிலைமை ஏற்படுத்த தவறியிருந்தால், இலங்கையின் நிலைமையும் அவ்வாறுதான் இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க –

“காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பொருளாதார வலுவற்ற ஆபிரிக்க பிராந்திய நாடுகளின் கடன் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதை இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் உள்வாங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், காலநிலை மாற்றத்தை கையாள்வது தொடர்பிலான பிராந்திய தலைமைத்துவத்தை ஏற்க இலங்கை தயாராக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை தற்போது சர்வதேச சமூகத்திற்குள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி ஒதுக்கீடுகள் அவசியம். இதற்குத் தேவையான பணம் இது வரை கிடைக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் சுமார் 100 பில்லியன் டொலர்களை உக்ரைன் போரிலும் காஸா போரிலும் செலவு செய்துள்ளன. ரஷ்யா எவ்வளவு செலவழித்தது என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தப் பணத்தை ஆபிரிக்க நாடுகளுக்கும், ஏனைய நாடுகளுக்கும் வழங்கினால், சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

யுத்தம் செய்து பயனில்லை. உக்ரைனில் போரை நிறுத்துமாறு நாங்கள் கோருகிறோம். காஸாவில் போரை நிறுத்துங்கள். அந்தப் போரை நிறுத்தி 05 வருடங்களில் பலஸ்தீன அரசை உருவாக்குங்கள். அதேபோன்று, இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை எடுங்கள்.

ஆனால் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது அது பற்றிய உலகின் தெற்கில் குரல் எழுப்புவதாகும். இந்தப் போரை நிறுத்தி ஆபிரிக்க நாடுகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நாட்களில் கென்யாவில் நடந்த கலவரங்களைப் பார்த்தோம். தற்போது சுமார் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்யவில்லை என்றால் ஏற்படும் நிலைதான் இது. இலங்கையில் இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்காவிடின் நாமும் இதே நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கும்.

எனவே, இந்தப் பணத்தை அந்த நாடுகளுக்கு வழங்க வேண்டும். அதற்கு இலங்கை முழுமையாக ஆதரவளிக்கிறது. அத்தகைய உதவியை இலங்கை எதிர்பார்க்கவில்லை. இலங்கை தனது கடனை மறுசீரமைத்து முன்னோக்கிச் செல்கிறது. அதற்குத் தேவையான ஆற்றலும் அறிவும் நம்மிடம் உள்ளது. அந்தப் பாதையில் நாம் தொடர வேண்டும். அதன்போது, நாம் போட்டிமிக்க, டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்கு மாற வேண்டும். நமது சக்தியுடன் அந்தப் பயணத்தை நாம் மேற்கொள்வோம்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106