தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு!
Friday, May 14th, 2021
தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த நடைமுறைக்கு மாறாக வீடுகளிலிருந்து வெளியே செல்பவர்களை கைதுசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் பொதுமக்கள் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, வீடுகளிலிருந்து வெளியேறவேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் அதற்கமைய தமது அன்றாட செயற்பாடுகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
3 மாதத்துக்குள் 720 முறைப்பாடுகள் - இலங்கைக் கணினி அவசர நடவடிக்கை குழு!
பொதியை பெற வந்தவரை மிரட்டிய யாழ் - கொழும்பு தனியார் பேருந்து பொதிகள் சேவைகள் நிறுவனத்தினர் - யாழ்ப...
இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை -அமைச்சர் பிரசன்ன ...
|
|
|


