விதிமுறைகளை மீறிய சாரதிக்குத் அபராதம்!

Saturday, March 18th, 2017

மது போதையில் போக்குவரத்து  விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு சாவகச்சேரி நீதிவான் மன்றம் 24ஆயிரம் ரூபா தண்டம் விதித்து உத்தரவிட்டது.

சாவகச்சேரி நகர் வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் சமிஞ்சை காட்டினர். எனினும் அதில் பயணித்தவர் நிறுத்தாமல் சென்றார். அவரைத் துரத்திப் பிடித்துச் சோதனையிட்ட போது அவரிடம் சாரதிய அனுமதிப் பத்திரம் வாகன வரிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப் பத்திரம் ஆகியவை இருக்கவில்லை. அத்துடன் அவர் மது போதையில் வானம் செலுத்தினார் என்றும் கண்டறியப்பட்டது. என்று சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபருக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சாவகச்சேரி நீதிவான் மன்றில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். 5 குற்றஞ்சாட்டுகளுக்கமான அவரை 24ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106