நெல்லுக்கான சந்தை வாய்ப்பு பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ்!

Friday, May 7th, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் கணிசமானளவு நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் அவற்றை காயவிட்டு பதனிடுவதில் காணப்படுகின்ற குறைபாடுகளினால் சரியான சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்தவகையில், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மாவட்டத்தில் பல்வேறு பாகங்களில்  சுமார் பத்து நெல் காய வைக்கும் நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற துறைசார் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு தெரிவித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழவின் இணைத் தலைவர், விவசாய நடவடிக்கைகளுக்கு செயற்கை பசளைகளை பயன் படுத்த எமது விவசாயிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Related posts:

தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் குறித்த எமது எண்ணங்கள் இன்னம் மாறவில்லை நாடாளுமன்றில் செயலாளர்...
பனை தென்னை வள கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய, வேலைத் திட்டங்கள் குறித்து அமைச...
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஜனாதிபதிக்கு பூரண ஒத்துழைப்பு தொடரும் - அரசியல் கைதிகள் விடுதலை த...

நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது - ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா!
கற்பாறையில் விதைத்துவிட்டு பயனை எதிர்பார்க்க முடியாது – கரைதுறைப்பற்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்ட...
வடக்கில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர்களான டக்ளஸ் த...